2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பில்டப் தேவையில்லை

George   / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்பத்தில் இருந்தே யதார்த்த நாயகனாக நடித்து வருபவர் விஜயசேதுபதி. மற்ற நடிகர்களைப்போன்று ஹீரோவுக்குரிய பில்டப் காட்சிகளை தனக்காக வைப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

முக்கியமாக ஹீரோ என்றால் ஜெயித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது வேண்டாம். அவனும் தோல்வியை சந்திக்க வேண்டும் என்று நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்பாக கதைகள் இருக்க வேண்டும் என்று இயக்குநர்களிடம் வெளிப்படையாகவே சொல்கிறார் விஜயசேதுபதி.

அந்தவகையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள “கவண்” திரைப்படத்தில் தகவல் தொழிநுட்பம் சம்பந்தப்பட்ட கதையில் நடித்தபோதும், தனக்கே உரிய பாணியில்தான் நடித்திருக்கிறாராம்.

அதன்காரணமாக, தனது திரைப்படங்களில் ஹீரோக்களுக்கு கொடுக்கும் சின்னச்சின்ன பில்டப் காட்சிகளைகூட இந்த திரைப்படத்தில் விஜயசேதுபதிக்காக வைக்கவில்லையாம் கே.வி.ஆனந்த்.

அதனால், தான் இதுவரை இயக்கிய திரைப்படங்களில் “கவண்” ஒரு இயல்பான, யதார்த்தமான கதையோட்டத்துடன் உள்ளதாக  கே.வி.ஆனந்த் தெரிவிக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .