12 ஜோதி லிங்க தரிசனம்
20-02-2017 02:50 PM
Comments - 0       Views - 30

கம்பளை, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், எதிர்வரும் 24ஆம் திகதி  காலை 9 மணிமுதல் மறுநாள் காலை 9 மணிவரையும் 25, 26, 27அம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 9 மணிவரையும்,  பன்னிரு ஜோதி லிங்கங்க தரிசனம் நடைபெறவுள்ளது.

இதனூடாக, பாரதத்தின் வெவ்வேறு மாநிலங்களிலுள்ள மிகவும் மகிமைவாய்ந்த பன்னிரு ஜோதி லிங்கங்களை, ஒரேயிடத்தில் தரிசிக்கும் பாக்கியம் மக்களுக்குக் கிட்டியுள்ளது.

அத்துடன், ஆன்மீகப் படவிளக்கக் கண்காட்சி, மனச் சுமையை இறைவனிடம் கொடுப்பதற்கான ஆன்மீக யாக குண்டம், தியானம் போன்ற நிகழ்வுகளையும், இலங்கை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வுகள் அனைத்தும், முற்றிலும் இலவசமானது. இன, மத, மொழி பாகுபாடின்றி அனைவரும் சமூகமளிக்கலாம் என ஏற்பாட்டுக்கு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: 011-2717572, 077-0589359,  077-7712927 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

"12 ஜோதி லிங்க தரிசனம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty