மிருகங்களைவிட மனிதனே மோசமானவன்
20-02-2017 07:10 PM
Comments - 0       Views - 29

வேட்டையாடுதல் என்பது, மிருகங்கள் தங்கள் உணவுக்காக மட்டும் செய்யும் கருமம் ஆகும். 

ஆனால், மனிதர்கள் செய்யும் வேட்டைகளோ படுபயங்கரமானதும் எல்லைகள் அற்றதுமாகும். அரசியல், தொழில், பணம் என்பவற்றை அடைய, இவர்கள் செய்யும் அடாவடித்தனமான வேட்டை பற்றி இயம்புதல் அரிது.

 இன, மத, மொழியைச் சாட்டாக வைத்துச் செய்யும் யுத்தங்களை, நடத்தும் நாடுகள் செய்யும் அக்கிரமங்களுக்கு என்ன நாமம் சூட்டலாம். 

பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் எல்லாமே பகிரங்கமாக நடந்துகொண்டிருக்கும் வேட்டைகள்தான். 

மிருகங்களைவிட மனிதனே மோசமானவன். இவன் தனது சுயநலனுக்காக எதனையும் செய்வான். அவன் இயற்கையை அழிப்பதற்கு அச்சப்படவேயில்லையே.

இது, கடவுளை மிரட்டும் செயல்போல் இருக்கின்றது.  

வாழ்வியல் தரிசனம் 20/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

" மிருகங்களைவிட மனிதனே மோசமானவன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty