2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பிக் மெச்’களுக்குத் தடை?

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஹிரு பொத்முல்ல

“மோதல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து, பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற வேண்டுமாயின், பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் ‘பிக் மெச்’ கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும்” என, ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.  போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

 “பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக, பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை, உதாரணங்களாகக் கொள்ளலாம்.  

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக, மாணவர்களுக்கு இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல்கள், பாரிய அடிதடி தாக்குதல் என்றளவுக்குச் சென்றுள்ளதுடன், இதனால் தமக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்துடன், இந்தப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின் போது, மாணவர்களிடையே போதைப்பொருள் மற்றும் மதுபானப் பாவனை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .