குழந்தைகள் கூட, நமக்கு ஆசான்கள் தான்
21-02-2017 10:43 AM
Comments - 0       Views - 30

குழந்தைகள் எதனைச் செய்தாலும் அது அழகுதான். அவர்களின் குறும்புகளை இரசித்துப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் போதாது.

நாங்கள் குழந்தைகளில் அதீதமான இரசனை உணர்வையும் அறிவையும் அவதானித்துப் பிரமித்துப் போகின்றோம்.

இன்று ஒரு வயதுப் பாப்பா, தொலைக்காட்சிப் பெட்டியை ‘றிமோட்’ மூலம் இயக்குகின்றது. அதன் மூலம் தொலைக்காட்சிப் பெட்டியின் இயக்கத்தை நிறுத்தியும் விடுகின்றது.

தனது இரண்டு வயதுக்குப் பல வார்த்தைகளையும் புரிந்த, அழகாக மழலை மூலம் வெளிப்படுத்தி எங்கள் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றது.

இன்னும் ஒரு முக்கியமான விடயம், பெரியவர்களை விட, அன்பைப் பேதம் பார்க்காது அனைவரிடத்தும் பொழிகின்ற பண்பு, இயல்பிலேயே குழந்தைகளிடம் உண்டு. 

குழந்தைகள் கூட, நமக்கு ஆசான்கள் தான். 

வாழ்வியல் தரிசனம் 21/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"குழந்தைகள் கூட, நமக்கு ஆசான்கள் தான்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty