2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மண் அகழ்வை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி மற்றும் புணானை நீர்பாசன திட்டடத்தின்  கீழ் உள்ள பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் தனியார்களினால் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படுவதாகவும் எனவே, மண் அகழ்வை தடுக்க கோரியும்  இன்று செவ்வாய்க்கிழமை வாகனேரி வகிலாவிலா சந்தியில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச விவசாயிகள் ஈடுபட்டனர்.

எமது பிரதேசத்தில் பல இடங்களில் மண் அகழ்வு நடவடிக்கையில் இரவு பகல் என்று பாராமல் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இதற்கு பல அரச அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ் நடவடிக்கையினை தடுத்து நிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதனையும் செவிமடுக்காது  மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் சட்டரீதியாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாகவும் வெளியிட அனுமதிப்பத்திரங்களின் துணையுடன் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அகழப்படும் மண் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்மதி செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X