2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

SUZUKI STINGRAY AUTOMATIC அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த CEYLON MOTOR SHOW கண்காட்சி நிகழ்வின் போது, சுசூகியின் புகழ்பெற்ற நாமமான Suzuki Stingray 2017 தன்னியக ட்ரான்ஸ்மிசன் (AGS) உடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சி நிகழ்வு, 2017 ஜனவரி 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்றது. சுசூகி Wagonn R அண்மையில் Stingray என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையில் இந்த ரக வாகனங்களை விநியோகிக்கும் ஏக முகவராக அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட் திகழ்கின்றது.  

இலங்கையில் சுசூகி wagon R முதன் முறையாக 2002ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அன்று முதல் இன்றைய Stingray வரை பல குடும்பங்களின் முதல் தர தெரிவு வாகனமாக இது அமைந்துள்ளது  

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற CEYLON MOTOR SHOW நிகழ்வில், 2017 சுசூகி Stingray அறிமுக நிகழ்வில் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட் முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த ராஜபக்ஷ மற்றும் பயணிகள் வாகன பிரிவின் பணிப்பாளர் யொஹான் டி சொய்ஸா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.  

2017 Stingray தன்னியக்க கார் என்பது, வாகன நெரிசல் நிறைந்த வீதிகளில் சிக்கல் இல்லாத பயண அனுபவத்தை வழங்கும் வகையில், 5 வேக தன்னியக்க கியர் ஸிஃப்ட் (AGS) கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், ஸ்போர்டியர் நிலைகளுக்கு பொருந்தும் வகையில் மெனுவல் ஸிஃப்ட் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. திறந்த சந்தைகளில் காணப்படும் ரீகண்டிசன் செய்யப்பட்ட Stingray வாகனங்களுடன் ஒப்பிடுகையில், சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் இந்தப் புதிய 2017 Stingray AGS அமைந்துள்ளது. புதிய 2017 Stingray AGSஇல் காணப்படும் நிலத்திலிருந்தான உயரம் 165mm ஆக அமைந்துள்ளதுடன், இது ரீகண்டிசன் செய்யப்பட்ட ரகத்தில் 155mmஆகக் காணப்படுகிறது.  

பயணிகளின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு, 2017 Stingray AGS என்பது பல பாதுகாப்பு உள்ளம்சங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது, இதில் சாரதி மற்றும் முன்புற பயணிப்பவருக்கான எயார் பாக்கள் காணப்படுவதுடன், anti-lock பிரேக்கிங் (ABS) கட்டமைப்பும் உள்ளடங்கியுள்ளது. இவை அனைத்தும் நியம உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன. 2017 Suzuki Stingray AGSஇல் ஏராளமான உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

இதில் தொழிற்சாலையில் பொருத்தப்படும் உயர் தரம் வாய்ந்த ஒலி கட்டமைப்பு, சுக்கானில் பொருத்தப்பட்ட கட்டுப்படுத்தல்கள், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட அசல் சுசூகி அலொய் வீல்கள், பின்புற வைப்பர் ஃவொசர் மற்றும் டி-ஃபொகர், லெதர் மேற்பகுதியைக் கொண்ட மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய சுக்கான் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லாம்ப் போன்றவற்றுடன் முன்புற reflector grill போன்றன கவனத்தை ஈர்த்துள்ளன. 2 வருட கால உற்பத்தியாளர் உத்தரவாதம் அல்லது 50,000 கிலோமீற்றர்கள் வரை (முதலில் நிகழ்வது) 2017 Suzuki Stingray AGSக்கு வழங்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .