2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சன்சில்க் Hedakari Hair Fair 2017இல் சம்பு அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான சன்சில்க், “Hedakari Hair Fair” நிகழ்வை அண்மையில் ஜா-எல, K-Zoneஇல் முன்னெடுத்திருந்தது. புகழ்பெற்ற பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ரமணி பெர்ணான்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியுட்டி அக்கடமியின் நிபுணர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த அழகியல் நிபுணர்கள் போன்றவர்களும் பங்குபற்றியிருந்தனர்.  

2016 செப்டெம்பர் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புரட்சிகரமான சம்பு மற்றும் கண்டிஷனர் தெரிவுகளில், biotin, keratin, yoghurt protein, silk protein மற்றும் இயற்கை எண்ணெய் போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த அறிமுகத்துக்கு நிகராக ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மனம்மறவாத அனுபவத்தை சன்சில்க் Hedakari Hair Fairஇல் பெற்றுக்கொள்ளவும் அழைப்புவிடுத்திருந்தது.  

விஜயம் செய்தோரின் தேவைகள் மற்றும் கூந்தல் வகைகள் என்பதைப் பொறுத்து, அவர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் அவர்களுக்கு பொருத்தமான சம்பு மற்றும் கண்டிஷனர் வகை பற்றிய விளக்கங்கள் உள்ளடங்கியிருந்தன. ஆர்வமுள்ள நபர்களுக்கு தமது கூந்தலை கழுவிக் கொள்ளவும், புதிய அலங்காரத்தை இட்டுக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பிரத்தியேகமான கூந்தல் வலயங்கள் அடையாளமிடப்பட்டு விஜயம் செய்திருந்தவர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் அடர்த்தியான கூந்தலை அழகுபடுத்திக் கொள்வதற்கான நுட்பங்கள், நீண்ட கூந்தலை எய்துவதற்கான ஆலொசனைகள், வரண்ட மற்றும் உடைந்த கூந்தலை வளமூட்டிக்கொள்வது மற்றும் நீளமான கூந்தலை பேணுவது தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், அழகியல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், உதிரிப்பாகங்கள் பிரிவினூடாக கூந்தலுக்கு அழகு சேர்க்கும் சாதனங்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றன விற்பனை செய்யப்பட்டிருந்தன. சலோன் உரிமையாளர்களுக்கு இந்நிகழ்வில் தமக்கு அவசியமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்காக விசேட விலைக்கழிவுகளும் வழங்கப்பட்டிருந்தது.  

சன்சில்க் Hedakari Hair Fairஇல் பிரதேசத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் அழகியல் நிபுணர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் “Sunsilk Style Star” எனும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு மணமகள் அலங்காரம் மற்றும் மாலை நேர அணிகலன் என பிரிவுகளாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

மணப்பெண் அலங்காரம் மற்றும் மாலைநேர அணிகலன் போட்டியில் வெற்றியாளராக On Edge Style Salon தெரிவு செய்யப்பட்டிருந்தது. மாலைநேர அணிகலனுக்கான 2ஆம் இடத்தை Salon Beauty Line பெற்றுக்கொண்டது. 3ஆம் இடம் Salon Kalavi க்கு வழங்கப்பட்டிருந்தது. மணப்பெண் அலங்காரத்துக்கான 2ம் இடத்தை Managla Diné பெற்றுக்கொண்டது. மூன்றாமிடம் Salon Senadiக்கு வழங்கப்பட்டிருந்தது.  

கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமத்தெரிவுகளில் சன்சில்க் முன்னிலை வகிப்பதுடன், அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு புரட்சிகரமான அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக வெவ்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. அடுத்த பயணம் உங்களை அண்மித்ததாக அமைந்திருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .