2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையில் Oxford Elevators

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வணிக உட்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பாரியளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், செலவீனம் குறைந்த மாற்று பராமரிப்பு தெரிவுகளுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் Oxford Elevators கம்பனி (OEC), அண்மையில் தனது செயற்பாடுகளை, இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது.  

Oxford Elevators கம்பனியின், (OEC) ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.காதர் சாஹிபுவின் வழிகாட்டலின் கீழ், இலங்கையில் இந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் நிறுவப்பட்டுள்ள OEC குழுமம், டுபாய், அபுதாபி, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் சென்னை, மும்பாய், பெங்களூர், கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய பகுதிகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகள் வியாபாரத்தில், இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலான தொழில்நுட்ப, நிபுணத்துவ மற்றும் நிர்வாக அனுபவத்தை நிறுவனம் கொண்டுள்ளது.  

நிறுவனம் தனது சொந்த வர்த்தக நாமமான “Oxford” என்பதை கொண்டுள்ளதுடன், அதிவேக, சுழற்சியான, வீட்டு மற்றும் machine room less (MRL) உள்ளடங்கலாக car lifts, escalators, travellators, moving walks, scissor lifts, dump waiters மற்றும் தரிப்பு கட்டமைப்புகள் போன்றவற்றை நிறுவுதல் மற்றும் நவீனப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.  

Oxford Elevators பிரைவெட் லிமிட்டெட் (இலங்கை) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஹமட் கே. ராஜா கருத்துத் தெரிவிக்கையில், “15 வருட கால உத்தரவாதத்துடன், இலங்கைக்கு Oxford பாரமுயர்த்திகள் அறிமுகம் செய்துள்ளதையிட்டு, நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதிய Oxford வர்த்தக நாம தயாரிப்புகள் பொருத்துகை மற்றும் முழுமையான பராமரிப்பு சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன. சகல விதமான வர்த்தக நாமங்களின் பழுதுபார்ப்புகள் மற்றும் மற்றும் நவீன மயப்படுத்தல்கள் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.  

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்த சந்தையில் Oxford வர்த்தக நாமத்துடன் நாம் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம் அதனூடாக பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகள் நவீனமயப்படுத்தல் மற்றும் சிக்கல் இல்லாத செலவீனம் குறைந்த வருடாந்த பராமரிப்பு AMC (annual maintenance contracts) போன்றன வழங்குகிறோம். (Original Equipment Manufacturer) பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகள் தொடர்பான செலவீனம் போன்றன சர்வதேச மட்டத்தில் அதிகரித்த வண்ணமுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் செலவீனம் குறைந்த மாற்று சேவை வழங்குநர்களை நாடிய வண்ணமுள்ளனர்” என்றார்.  

Oxford Elevators கம்பனி, தற்போது 1,500 அலகுகள் பாரமுயர்த்தி மற்றும் மின்தூக்கிகளைப் பராமரித்து வருகிறது. இதில் தனது சொந்த Oxford தயாரிப்புகள், Mitsubishi, Otis மற்றும் Sigma போன்றன உள்ளடங்கியுள்ளன. AMCகளுக்கு உதவும் வகையில் 1.5 மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த பாரமுயர்த்தி உதிரிப்பாகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 500க்கும் அதிகமான Oxford அலகுகளை நிறுவனம் பொருத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X