2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலத்திரனியல் அரச நிர்வாக முறைமை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலத்திரனியல் அரச நிர்வாக முறைமையின் கீழ், பொதுக் கொள்வனவுகளை மேற்கொள்வதன் மூலம் தற்போதைய பொது கொள்முதல் செயற்பாட்டை மிகச் செயல் திறன்மிக்க நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.

இலத்திரனியல் பொது கொள்முதல் செயற்பாட்டின் போது, நவீன மூலோபாயத்தைப் பயன்படுத்தி அச்செயற்பாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அதன் செயல் திறனை மேம்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய போட்டித்தனமை மற்றும் நியாய நிதிப் பெறுமதியை அதன் விலைக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஆரம்பமான தென்னாசியப் பிராந்தியப் பொது கொள்முதல் தொடர்பான மாநாட்டை, திங்கட்கிழமை தொடக்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, நிதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இம்மாநாடு இன்று ஆரம்பமானது.

தென்னாசியப் பிராந்தியத்தில் இலத்திரனியல் பொது கொள்முதல் வெற்றி, வாய்ப்பும் சவால்களும்“ என்ற தொனிப்பொருளிலான இப்பிராந்திய மாநாடு, கொழும்பிலும் கண்டியிலுமாக 04 நாட்கள் நடைபெறவுள்ளன.

இம்மாநாட்டில் ஆப்கனிஸ்தான், பங்களாதேசம், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொது கொள்முதல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள பல சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  

அமைச்சர் ரவி கருணாநாயக்கா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“இலங்கையில் இலத்திரனியல் பொது கொள்முதல் முறைமையை அறிமுகப்படுத்தவதற்கு உலக வங்கி உதவி அளிப்பதற்கு தயாரென அறிவித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இம்மாநாடு இங்கு நடைபெறுவது சிறப்பான விடயமாகும். உலக வங்கிக்கு மேலதிகமாக சர்வதேச அமைப்புகளுக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஐரோப்பிய ஆணைக்குழு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் நிறுவனங்களும் இலங்கையின் பொது நிதி முகாமைத்துவ தொகுப்பு செயற்பாட்டுக்கு உதவி அளிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

இம்மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட இலத்திரனியல் பொது கொள்முதல் செயற்பாடு தொடர்பில், பல தொனிப்பொருட்கள் மற்றும் அதன் ஊடாக அடையப் பெறும் முடிவுகள், இந்நாட்டுக்கு மாத்திரமல்லாமல், மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் எதிர்கால இலத்திரனியல் கொள்முதல் செயற்பாட்டின் சவால்களை வெற்றி கொள்வதற்கும் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் உதவும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .