மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு
21-02-2017 07:00 PM
Comments - 0       Views - 17

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட நாச்சிக்களி பிரதேசத்தில், தெரிவுசெய்யப்பட்ட மீனவர்களுக்கு, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாண விவசாய, கடற்றொழில் அமைச்சினால் இதற்காக, 10 இலட்சம் ரூபாய்  நிதி, ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

கற்பிட்டி நாச்சிக்களி பிரதேச மீனவர் சங்கக்  கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில்,  வடமேல் மாகாண விவசாய, கடற்றொழில் அமைச்சர் சுமல் திசேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது  40 மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

"மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty