2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அம்பாறையில் தமிழர்கள் புறக்கணிப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள், கடைசி நிலைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன் தெரிவித்தார்.

பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட 13ஆம் கிராம விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

'1960ஆம்  ஆண்டுக்கு முன்னர,; குமுக்கன் தொடக்கம் வெருகல் வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டமாக இருந்த தமிழர் பிரதேசம்,  1960ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டம் என வேறாகப் பிரிக்கப்பட்டது.

இன்று அம்பாறை மாவட்டத்தில், தமிழர்கள் மூன்றாம் நிலையில் இருப்பதுடன் ஏனைய இனங்களின் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மற்றும் திட்டமிட்ட நில அபகரிப்புக்கள், வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில்  புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை வேதனையான விடயமாகும்.
ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நிலை இல்லை. தமிழ் மக்கள் அங்கு செறிந்து வாழுகின்றோம்.

ஆனாலும், நாம் தேர்தல் காலங்களில் விடும் பாரிய தவறுகளால் எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடுகின்றது.

ஆகையால், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக, திட்டமிட்டு வேலைகளை முன்னெடுக்க வேண்டும்' என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X