2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வறுமை ஒழிப்புக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

2017ஆம் ஆண்டை, அரசாங்கம் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தி, அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்; ஏ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்;.

திவிநெகும திணைக்களத்தின் வாழ்வின் எழுச்சி சமூக பாதுகாப்பு நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், நேற்றுத் திங்கட்கிழமை, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திவிநெகும திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலக தலைமைப் பீட முகாமையாளர்; எம்.பி.எம்.ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,

'அரசாங்கம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, சமூகத்தில் எல்லோரும் சம அந்தஸ்துடன் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கான வழிவகைகளை, பிரதேச மட்டத்திலும் தேசிய ரீதியிலும் முன்னெடுத்துள்ளது.

வருமானத்தில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வு காரணமாகவே, சமூகத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

திவிநெகும திணைக்களம், இன்று பல இலட்சக்கணக்கான நிதியைக் கொண்டு பாரிய உத்தியோகத்தர்;களுடன் செயற்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில், வறுமையை ஒழிப்பதில் நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

இவ் வருடம், எவ்வாறு வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களை, வழுவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில், 399 குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார ரீதியாக வழுப்படுத்துவதை  இலக்காகக் கொண்டு செய்ற்பட திட்டமிட்டுள்ளோம்.

இக் குடும்பங்கள், யாரின் தயவும் இல்லாமல் வாழ்வதற்கான வழி வகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாம் எல்லோரும் அர்ப்;பணிப்புடன் செய்றபட வேண்டும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள், தொடர்;ந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல், சுயமாக வாழ, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகவல் அறியும் சட்டம், இலங்கையில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்கான உரிமை எல்லோருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஓர் அரசாங்க உத்தியோகத்தர், தான் செய்யும் கடமையின் வெளிப்படைத் தன்மையை எல்லோருக்கு வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .