2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குவைத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த ​பெண் 13 வருடங்களின் பின் நாடு திரும்பினார்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட் நாட்டுக்கு, பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர், 13 வருடங்களாக சிறைப்பட்டிருந்த நிலையில், 25 இலட்ச ரூபாய் இழப்பீடுடன் நாடு திரும்பியுள்ளார். 

இவர், 13 வருடங்களாக சம்பளம் கிடைக்காத நிலையில் வீட்டு உரிமையாளரினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, வீட்டில் இருந்த தப்பிய குறித்த பெண், குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 

ஓட்டமாவடியில் வசிக்கும் மொஹமட் அலியார் தய்ருன்ஸா என்ற இந்த பெண்ணுக்கு, போலி விமானக் கடவு சீட்டுத் தயாரித்து, மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் குவைத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது வயது 13 வயது என, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அறிவித்துள்ளார். 

13 வருடங்களாக அந்த பெண் தொடர்பில் இலங்கையில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்காத நிலையில், அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என, இதுவரை அவர்கள் நம்பியுள்ளனர். 

வீட்டு உரிமையாளரிடம் இருந்து தப்பி, தூதரக அலுவலகத்துக்கு வருகைத்தந்த பெண்ணிடம். உரிய தகவல்களை இலங்கை தூதுவர் நந்தீபன் பாலசுப்ரமணியம் பெற்றுள்ளார். 

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக, அவருக்கு 25 இலட்சத்து 20 ரூபாய் இழப்பீடாக வழங்குவதற்கும், விமான டிக்கெட் பெற்றுக் கொடுப்பதற்கும், வீட்டு உரிமையாளர் இணங்கியுள்ளார். 

15 நாட்களுக்குள் அவசியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தூதரகத்தினால் உரிமையாளரிடம் இழப்பீடும் அறிவிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .