2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தனியார் நீதிமன்றமா, இது கூடத் தெரியாதா?’

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

‘”உலகில் எந்த நாட்டிலும் நீதித்துறையை தனியார் மயப்படுத்தும் முறை இல்லை. இதனைக் கூட அறியாதவர்கள் உள்ளமைதான், மக்கள் விடுதலை முன்னணியின் இன்றைய நிலைக்கு காரணம்” என, சபைமுதல்வரும் உயர்கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

அவர் தொடரந்து கூறுகையில், “இலங்கையில் கல்விகற்கும் மருத்துவ மாணவர்கள், பட்டம் பெற்றதும் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுவதால் தான், நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுபாடு நிலவுகின்றது. அதன்காரணமாகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க இடமளிக்க வேண்டியுள்ளது” என்றார்.  அதன்போது குறுக்கிட்டுக் கேள்வியெழுப்பிய பிமல் ரத்னாயக்க எம்.பி,

“மருத்துவர்கள் பற்றாக்குறையினால் தனியார் மருத்துவ கல்லூரி உருவாக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுதால், இலங்கையில் விசாரணையின்றி காலதாமதமாகக் காணப்படும் வழக்குகளை விசாரிக்க தனியார் நீதிமன்றங்களை உருவாக்குவீர்களா?” என்றார். 

அதற்குப் பதிலளித்த உயர்கல்வியமைச்சர்,”உலகில் எந்த நாட்டிலும் நீதித்துறையை தனியார் மயப்படுத்தும் முறை இல்லை. இதனைக் கூட நீங்கள் அறிந்திருக்கவில்லை. இவ்வாறானவர்கள் இருப்பதால் தான், 35 உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று 5 உறுப்பினர்களாகக் குறைவடைந்துள்ளது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X