2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் துறைமுகத்தில்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குருலு கூஜன காரியகரவன

மீன்தொட்டிகள் என்ற பெயரில், நாட்டுக்குள் கொண்டுவர முயலப்பட்ட பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன், கொழும்புத் துறைமுகத்தில் பல வாரங்களாகக் காணப்படுவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

20 அடி நீளமான அந்தக் கொள்கலன், சிங்கப்பூரிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு, ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில், கொழும்பை வந்தடைந்துள்ளது. மீன்தொட்டிகளே அந்தக் கொள்கலனில் காணப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கொழும்பை வந்தடைந்த மூன்றாவது நாளுக்குள், அந்தக் கொள்கலன் திறக்கப்பட்டு, சோதனையிடப்பட்டுள்ளது. அதன்போதே, சட்டவிரோத சிகரெட்டுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. கொள்கலனின் திறக்கும் பகுதிக்கு அண்மையாக, மீன்தொட்டிகள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டுக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பின்னால், சிகரெட்டுகள் காணப்பட்டுள்ளன. 

பல வாரங்களாகியும், அந்தக் கொள்கலன் ஏன் துறைமுகத்தில் காணப்படுகிறது என அதிகாரிகளிடம் வினவியபோது, குறித்த கொள்கலனுக்குள் காணப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளை, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் முதலில் தவறவிட்ட நிலையில், இரண்டாவது தடவையாகச் சோதிக்க வேண்டியேற்பட்டதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இவை ஊடகங்களுக்கு விரைவில் காண்பிக்கப்படுமெனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .