2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'யுத்த அங்கவீனர்களை கணக்கிட காலம் தேவை’

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்கு, இன்னும் இரண்டுவார கால அவகாசம் வேண்டுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிநின்றார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்த கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் ​போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

டக்ளஸ் ​தேவானந்தா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனவர்களான பலர் உள்ளனர். அவர்களில், குறிப்பிடத்தக்கதொரு தொகையினரின் முள்ளந்தண்டுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழந்துள்ள​து என்பதை அறிவீர்களா?   

​அத்துடன், இடம்​பெயர்ந்துள்ள இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதோடு இன்னும் சிலர் இதுவரை குடியமர்த்தப்படவில்லை என்பதையும் அறிவீர்களா, அங்கவீனமுற்ற நபர்கள், வீடுகளுக்கு பிரவேசித்தல் மற்றும் மலசல கூடங்களைப் பயன்படுத்துதல் ஆகிய வசதிகள் தொடர்பாக கவனஞ் செலுத்தி அவர்களுக்கு பொருத்தமான விதத்தில் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?" என்றும் வினவியிருந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X