2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கு மறுப்பு; கிழக்கு தாமதம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலத்துக்கு உடன்பாட்டைத் தெரிவிக்க வட மாகாண சபை மறுத்துள்ள அதேநேரம், அரசியலமைப்புத் திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை அச் சட்டமூலம் தொடர்பான பரிசீலனையைத் தாமதப்படுத்துவதாக, கிழக்கு மாகாண சபை  அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சபாநாயகர், சபைக்கு அறிவித்தார்.   

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (21) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகர் அறிவித்தல்கள் நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

"நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை நிலைபேறுதகு அவிபிருத்தி சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரைக்கு அமைவாக, ஒவ்வொரு மாகாணசபைக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டது.   

மாகாணசபைகளின் அபிப்பிராயங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டது.   

மத்திய, வடமேல், சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய மாகாண சபைகள் சட்டமூலத்தை பரிசீலித்து, திருத்தங்களுக்கு உட்பட்டு அம்மாகாண சபைகளின் உடன்பாட்டைத் தெரிவித்துள்ளன.   

வட மாகாணசபை இச்சட்டமூலத்துக்கு தமது உடன்பாட்டை தெரிவிக்கவில்லை என்கின்ற அதேநேரம், அரசியலமைப்பு திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாணசபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .