பேதம் என்ன மானிடர்களே?
22-02-2017 09:53 AM
Comments - 0       Views - 22

பௌர்ணமி நள்ளிரவில் பால் நிலவுஒளிரும் காலத்தில் சிறுகுடிசையில் சிவந்த நிறத்துடன் பிறந்தேன் நான்.

 

எவருக்குமே இல்லாத புதுவடிவத்துடன் எனது ஆன்மா உடை உடுத்துக் கொண்டது.

எனக்கு மட்டுமா புதுப்புது வடிவங்கள்? இந்த அவனியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் எவருக்குமே கிடைத்திடாத வடிவங்கள்தான் ஒவ்வொன்றுக்கும் அமைந்து விடுகின்றன.பராயங்கள் மாறிக்கொண்டே இருக்க, அவரவர்களின் வடிவங்களும் மாறியபடியே... மாறியபடியே...!

எனவே, நாங்ககள் எல்லோருமே பெருமைப்பட்டுக் கொள்வோமாக! கிடைத்தற்கரிய உருவங்களை மனிதன் மட்டுமல்ல, எல்லோருக்குமே கிட்டுகின்றன.  எனவே பேதம் என்ன மானிடர்களே?

இதில் அழகு பற்றிய பிரச்சினைகளே அர்த்தமற்றது. எல்லா வடிவங்களையும் கௌரவப்படுத்துக! போற்றிடுக. ஆண்டவனின் படைப்புகள்  அர்த்தம் நிறைந்தவை என உணர்வோம். 

 

வாழ்வியல் தரிசனம் 22/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

 

"பேதம் என்ன மானிடர்களே?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty