வரலாற்றில் இன்று: பெப்ரவரி 22
22-02-2017 12:00 AM
Comments - 0       Views - 48

1819: புளோரிடா பிராந்தியத்தை 50 லட்சம் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஸ்பெய்ன் விற்பனை செய்தது.

1882:  சேர்பிய  இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது.

1924: அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ், வெள்ளை மாளிகையிலிருந்து வானொலியில் உரை நிகழ்த்திய முதலாவது   அமெரிக்க ஜனாதிபதியானார்.

1948: செக்கஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ புரட்சி ஏற்பட்டது.

1958: எகிப்து, சிரியா ஆகியன ஐக்கிய அரசு குடியரசில் இணைந்தன.

1974: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு மாநாட்டு அமைப்புக் கூட்டத்தில் 37 நாடுகள் பங்குபற்றின. பங்களாதேஷை அவ்வமைப்பு அங்கீகரித்தது.

1974: அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஷனை சாமுவேல் பைக் என்பவர் கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றது.

1979; பிரிட்டனிடமிருந்து சென் லூசியா சுதந்திரம் பெற்றது.

1997: டோலி எனும் ஆடு குளோனிங் முறையில் பிரதியாகக்கம் செய்யப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டது.

2002: அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாஸ் சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

2002: இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.

2006: பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

2011: நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 183 பேர் பலி

"வரலாற்றில் இன்று: பெப்ரவரி 22" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty