2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாபெரும் நடை​பவனி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மாபெரும் நடை​பவனியொன்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி, சுகாதார அமைச்சு வரை சென்றது.

இந்த நடைபவனியை, நிறைவுகாண் மருத்துவவியல் தொழில்வல்லுனர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

பட்டதாரி உத்தியோகத்தர்களுக்குப் பொருத்தமான சம்பள அளவினை பெறுதல், அதிகரித்த அடிப்படைச் சம்பளத்துக்கு அமைய மேலதிக நேரக் கொடுப்பனவு வீதத்​தை அதிகரித்தல், 2015.12.31க்குப் பின்னர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வகுப்பு ஏற்றத்தைப் பெறுதல், 3/2016 பொது நிர்வாகச் சுற்றறிக்கை மூலம் நிறுத்தப்பட்டுள்ளவற்றை மீளப் பெறுதல், அரச கரும மொழிகள் நடைமுறைப்படுத்தும் முறையில் மாற்றம் மற்றும் நிர்வாக பரிபாலனத்தில் பதவியை உருவாக்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்த நடைபவனியில், பலர் கலந்து​கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .