அலங்கார தேர் பவனி
22-02-2017 03:58 PM
Comments - 0       Views - 57

எம்.செல்வராஜா  

பண்டாரவளை, ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார தேர் பவனிப் பெருவிழா, இன்று 23ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 25ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.

விநாயகர் வழிபாடு உள்ளிட்ட கிரியைகளுடன் இன்றையதின உற்சவம் ஆரம்பமாகி, நாளை அதிகாலை, கணபதி ஹோமத்துடன், ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு 1,008 வலம்புரி சங்குகளினது மஹா அபிஷேகம் இடம்பெற்று, அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் எழுந்தருளி, பண்டாரவளை மாநகர வீதிகளில் பவனி வந்து, அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

25ஆம் திகதி அதிகாலை, பிராயச்சித்த அபிஷேகம் உள்ளிட்ட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று, தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.

மேலும், இத்தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் 48 அடி உயரத்திலான தியான சிவன் மண்டபத்தில் மஹா சிவராத்திரி, நான்கு ஜாமப் பூஜைகளும் இடம்பெறவுள்ளன.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும், தேவஸ்தான பிரதம குருசிவ ஸ்ரீ சுதாகரசர்மாவின் தலைமையில் முன்னெடுக்கப்படுமென்று, தேவஸ்தான அறங்காவலர் சபையினர் தெரிவித்தனர்.

"அலங்கார தேர் பவனி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty