பிராமிண் பெண்ணாக தமன்னா
22-02-2017 10:20 PM
Comments - 0       Views - 162

தேவி, கத்திச்சண்டை திரைப்படங்களுக்குப்பிறகு சிம்புவுடன் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தில் ரம்யா என்ற கேரக்டரில் நடித்துள்ள தமன்னா, அதையடுத்து “பாகுபலி-2“வில் முதல் பாகத்தில் நடித்த அவந்திகா வேடத்தில் மீண்டும் நடித்துள்ளார்.

இதில் பாகுபலியில் புரட்சிகரமான வேடம் என்ற போதும், சிம்புவின் “டிரிபிள் ஏ” திரைப்படத்தில் கவர்ச்சிகரமான ரோலில் நடித்துள்ளார் தமன்னா. அதையடுத்து புதிய பட வாய்ப்புகளுக்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான் வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படவாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவிதான் ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் அவர் விலகியதால் அடுத்து தமன்னா ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது.

மேலும், இந்த திரைப்படம் வடசென்னை கதையில் தயாராகி வருவதால், தமன்னா ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிப்பதாக ஒரு செய்தி கசிந்து வந்தது. ஆனால் இப்போது அதுகுறித்து விசாரித்தால் தமன்னா அந்த திரைப்படத்தில் ஆட்சாரமான பிராமிண் பெண்ணாக நடிப்பதாக சொல்கிறார்கள்.

"பிராமிண் பெண்ணாக தமன்னா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty