2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுதாவளையில் துப்பாக்கிச்சூடு; அதிகாரி படுகாயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், மட்டக்களப்பு – கச்சேரிக் காணிப் பிரிவுப் பணிப்பாளர் படுகாயமடைந்துள்ளாரென, களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் (வயது 31) மீது, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு, சென்றுள்ள மேற்படி சந்தேகநபர்கள், பணிப்பாளரை வெளியே அழைப்பித்தே, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால், பணிப்பாளரின் வலது கையில் சூடு பட்டுள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னன்குடா பிரதேசத்தில், காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில், மேற்படி பணிப்பாளரே ஈடுபட்டு வந்துள்ளார். இது விடயமாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், புன்னன்குடா பிரதேசத்தில் வைத்து, அவர் மீது தாக்குதல் நடத்த முயலப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணிகளை பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காக, இன்றைதினம் அவர், ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார்.

நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பிய ஓரிரு மணித்தியாலங்களிலேயே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை,  களுவாஞ்சிக்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .