செய் கருமம் பூரணமெனில், காரிய சித்தி
23-02-2017 10:27 AM
Comments - 0       Views - 66

நாம் கருமத்தைச் செய்யும்போது அதனை மட்டுமே செய்ய வேண்டும். அடுத்த கருமத்தில் புலனைச் செலுத்தக்கூடாது. மனதை ஒருமைப் படுத்தாமல் பற்பல விடயங்களை நெஞ்சில் இருத்துதல் கூடாது.

மிருகங்கள், ப​றவைகளின் இயல்புகளைப் பாருங்கள். அவை திடசிந்தையுடன் செயற்படுகின்றன. அவை உணவைத் தேடும்போது சோர்ந்துவிடுவதில்லை. 

புலி, சிங்கங்கள் மட்டுமல்ல; எல்லா மிருகங்களுமே வேட்டையாடும்போது, அதனை மட்டுமே செய்து முடிக்கும். இரை கிடைத்ததும் சுதந்திரமாக உலாவி வரும். 

மனிதர்களோ எல்லாப் பிரச்சினைகளையும் மனதில் இருத்தி, அதனைத் தீர்க்க முடியாமலும் ஒரு கருமத்தையும் ஒழுங்காகச் செய்ய முடியாமலும் திணறுகின்றார்கள். 

செய் கருமத்தின் நோக்கத்தைப் பூரணமாக உணர்ந்தாலே போதும். காரிய சித்தி தானாகவே வந்து எய்திவிடும்.

மனம் தளராத செயல் நிலைபெற்ற வாழ்வைத் தரும். 

வாழ்வியல் தரிசனம் 23/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"செய் கருமம் பூரணமெனில், காரிய சித்தி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty