ரவிராஜ் வழக்கு மீண்டும் விசாரணை
23-02-2017 11:00 AM
Comments - 0       Views - 20

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை, மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, அவரது மனைவி சசிகலா ரவிராஜினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று அனுமதியளித்தது.

முன்னதாக ரவிராஜ் கொலை வழக்கு, விஷேட ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர்களான ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை, விஷேட ஜூரி சபை முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சட்டத்துக்கு முரணானது என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறும் அந்த வழக்கை மீள விசாரணைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதனை ஆராய்ந்த இருவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை, மார்ச் 28இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென அறிவித்தனர்.

மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் தகவலளிக்கும் படி, சட்டமா அதிபர் மற்றும் விடுவிக்கப்பட்ட ஐவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

"ரவிராஜ் வழக்கு மீண்டும் விசாரணை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty