‘காடுகளை அழிக்க வேண்டாம்’
23-02-2017 09:11 AM
Comments - 0       Views - 34

ஜே.ஏ.ஜோர்ஜ்

 “வட மாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை மாற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது, காடுகளை அழித்து இயல்பு நிலையைச் சீர்குலைக்க வேண்டாம்” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் ​புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கான நேரத்தின் போது, கேள்வியெழுப்பிய அவர், மேலும் கூறியதாவது,

“மாங்குளம், பனிக்கன்குளம் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 7,200 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அந்தப் பிரதேசத்துக்குள் அமைந்துள்ள, 986 கிலோமீற்றர் நீளமான நீர்நிலைகள் அழிவடையும் அபாயம் உள்ளது.

மேலும், இங்கு ஊற்றெடுக்கும் கனகராயன் ஆறானது, 839 வடிநிலமாக காணப்படுகின்றது. இந்த ஆற்றின் ஊடாக, வுவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. சுண்டிக்குளம் பகுதியில், இந்த ஆறு கடலில் கலக்கின்றது.

இவ்வாறன நிலையில், இந்த காட்டை அழித்து அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது, அங்கு பாரிய சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், காட்டு யானைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. எனவே, இதற்கு உரியத் தீர்வ வேண்டும்” என்றார்.

"‘காடுகளை அழிக்க வேண்டாம்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty