‘காடுகள் காக்கப்படும்’
23-02-2017 09:12 AM
Comments - 0       Views - 59

ஜே.ஏ.ஜோர்ஜ்

“வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக, மாங்குளத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதுடன், இதற்காக, ஏ- 9 வீதியின் இரு மறுங்கிலும் அமைந்துள்ள 1,400 ஏக்கர் காடுகளை உள்ளடக்கிய 31 ஆயிரம் ஏக்கர் காணி, இனங்காணப்பட்டுள்ளது” என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கான நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“வட மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில், பல தரப்புக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட வருகின்றன. வனம், சுற்றாடல், நீர்வளம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட 5 அடிப்படைகளின் கீழ், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாங்குளத்தை தலைநகரமாக அபிவிருத்திச் செய்ய, ஏ-9 வீதியில் 31 ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளது. இதில் 1,400 ஏக்கர் காணியில் காடு காணப்படுகின்றது. காடு மற்றும் நீர் நிலைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், கனகராயன்குளம் ஆற்றுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. 

மாங்குள நகர அபிவிருத்திக்காக இனங்காணப்பட்ட காணியில், காட்டு யானைகளின் வழித்தடங்கள் இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது” என்றார்.

"‘காடுகள் காக்கப்படும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty