2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

களனி ஹைபிரிட் பல்ப் அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 களனி கேபல்ஸ் பிஎல்சி, தனது புதிய தயாரிப்பான “களனி ஹைபிரிட் பல்ப்” ஐ சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2,000 மணித்தியாலங்கள் இடைவிடாது ஒளிர்வு காலத்தைக் கொண்டது. குமிழின் புறப்பகுதியில் ஏதேனும் ஏற்பட்டாலும், ஒளிரக்கூடிய திறன் கொண்டமைந்துள்ளமை இந்த ரக மின்குமிழின் விசேட அம்சமாகும். இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வகையைச் சேர்ந்த முதலாவது மின்குமிழாக இது அமைந்துள்ளது.  

“களனி ஹைபிரிட் பல்ப்” 30 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கக்கூடியது என்பதுடன், ஹேலோஜென் மின்குமிழ்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இவ்வகையான மின்குமிழ்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  

மின்குமிழினால் வெளியிடப்படும் மஞ்சள் நிற ஒளி என்பது, வீடுகளில் காணப்படும் சோர்வு நிலையைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாடசாலை மாணவர்களின் அறைகள் மற்றும் அதிகளவு வாசிப்பு பழக்கம் கொண்டவர்களின் அறைகளில் பொருத்துவதற்கு சிறந்ததாக அமைந்துள்ளது. தமது வீடுகளின் வனப்பு குறித்து கவனம் செலுத்தும் மக்கள், “களனி ஹைபிரிட் பல்ப்” ஐ பயன்படுத்த முடியும் என்பதுடன், அது வீட்டின் சுவர்களுக்கு அழகைச் சேர்க்கும் வகையில் மஞ்சள் நிற ஒளியை வெளிவிடுகிறது.  

இந்த மின்குமிழ் இழையைக் கொண்டிருப்பதில்லை, எனவே மின்குமிழ் ஏதும் திடீர் கடுமையான அசைவுக்கு முகங்கொடுத்தப் போதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே, கராஜ் உரிமையாளர்கள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டடங்களில் பணியாற்றும் பெயின்ட் பூசுவோர், இந்தப் பல்ப் வகையின் நீடித்த உழைப்பு மற்றும் உறுதியான தரம் ஆகியவற்றில் தங்கியுள்ளனர். கோழி வளர்ப்பு வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் இந்த மின்குமிழ் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. LED அல்லது CFL குமிழ்களைக் கொள்வனவு செய்வதற்கு இயலாத மக்களுக்கு “களனி ஹைபிரிட் பல்ப்” என்பது சிறந்த தெரிவாக அமையும். இது 2,000 மணித்தியாலங்கள் வரை ஒளிரக்கூடியது என்பதுடன், 30 சதவீதம் மின்சார சேமிப்புத்திறனையும் கொண்டது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.  

“களனி ஹைபிரிட் பல்ப்” பின் மற்றும் ஸ்க்ரூ ஆகிய இரு வகைகளிலும் விற்பனைக்குள்ளன. 18 வாற் முதல் 105 வாற் வரையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது சந்தையில் இந்தத் தயாரிப்பு விற்பனைக்குள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X