புதிய முகவரியில் புத்தளம் மாவட்ட RDB அலுவலகம்
24-02-2017 03:24 AM
Comments - 0       Views - 16

புத்தளம் மாவட்டத்துக்கான RDB வங்கியின் அலுவலகம் புதிய முகவரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. இல. 16/B, கொழும்பு வீதி, மைக்குளம், சிலாபம் எனும் முகவரியில் இந்தக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், மாவட்ட கிளை வலையமைப்பை சிறந்த முறையில் நிர்வகிக்கும் வகையிலும், சகல வசதிகளையும் கொண்ட புதியப் பகுதிக்கு தனது காரியாலயத்தை வங்கி மாற்றியுள்ளது.  

RDBஇன் தலைவர் பிரசன்ன பிரேமரட்ன, நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த அபேசிங்க மற்றும் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரி.ஏ.ஆரியபால, மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, பிராந்திய பொது முகாமையாளர் எம்.பி.ஜயசிங்க, மாவட்டமுகாமையாளர் டபிள்யு.ஈ.ஏ. பீரிஸ் மற்றும் ஊழியர்கள் மற்றும் பெருமளவான வாடிக்கையாளர்கள் என பலரும் இந்தப் புதிய காரியலாயத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.  

இந்நிகழ்வின் போது தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளும் வழங்கப்பட்டிருந்ததாக வங்கி அறிவித்துள்ளது.  

"புதிய முகவரியில் புத்தளம் மாவட்ட RDB அலுவலகம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty