2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

CIM UKஇன் அங்கத்தரவாக சம்பத் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி

Gavitha   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் (UK) காப்பாளர் சபையின் அங்கத்தவராக, நதி பி தர்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனம், மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும். பிரித்தானியாவின் பேர்க்ஷயர், மெய்டன்ஹெட், மூர் ஹோலில் 2017 ஜனவரி 27ஆம் திகதி நடைபெற்ற பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் (UK) 28ஆவது வருடாந்த பொது சந்திப்பின் போது, இந்த நியமனம் குறித்து அறிவித்தல்விடுக்கப்பட்டிருந்தது. பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் (UK) காப்பாளர் சபையில் தன்னார்வ மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற நிலையாக இந்த நியமனம் அமைந்திருக்கும்.  

பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின், (UK) காப்பாளர் சபையில் 11 சபை அங்கத்தவர்கள் காணப்படுவதுடன், இரு சர்வதேச நிலைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த ஆண்டில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வதிவாளர்களுக்கு, நான்கு நிலைகள் இந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தன. இந்த இருநிலைகளில் ஒரு நிலை, உலகின் ஏனைய பிராந்தியங்களைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்கப்படும். இந்த நிலையை தர்மசிறி வாக்கெடுப்பின் மூலமாக தெரிவாகியிருந்தார். இந்த வாக்கெடுப்பு, 2016 டிசெம்பர் 12ஆம் திகதி நடைபெற்றது. இந்த நியமனத்தைத் தொடர்ந்து, CIM சர்வதேச அங்கத்துவத்தை நதி பிரதிபலிப்பார்.  

தெரிவு செய்யப்பட்ட சபை அங்கத்தவர்கள், ஏனைய சபை அங்கத்தவர்களுடன் இணைந்து CIM சர்வதேச ஆளுகை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக செயலாற்றவுள்ளனர். இதன் மூலம் CIM தகைமையை மேம்படுத்தி, உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தல் தொழிலுக்கு நியமங்களை வகுப்பதாக அமைந்திருக்கும்.  

நதி பி தர்மசிறியின் இந்த நியமனம் தொடர்பில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் நந்த பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியின் சார்பாக, CIM UK சபையில் நதி பெற்றுள்ள இந்த நிலை தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம். சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்தல் துறைக்கு அவர் வழங்கும் பங்களிப்பானது, எதிர்கால தலைமுறையினருக்கும் இதுபோன்ற நிலைகளை எய்துவதற்கு வழிகாட்டுவதாகவும் ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கும். அவரின் இந்த நியமனத்துக்கு சம்பத் வங்கி தனது பூரண ஆதரவை வழங்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .