2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்குக் காணிப் பிரச்சினையை விரிவாக ஆராய்ந்தார் ஹக்கீம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தினாலும், இனமுரண்பாடுகளினாலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், விரிவாக ஆராய்ந்துள்ளார்.   

இந்த விவகாரம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடனும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைக் கவனத்தில் கொண்டே ஆராயப்பட்டுள்ளது.   

இதற்கான கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், நேற்று (23) இடம்பெற்றது.    அங்கு சிறுபான்மையின விவசாயிகளினால் பரம்பரை பரம்பரையாக செய்கை பண்ணப்பட்டு வந்த பயிர் நிலங்களும், குடியிருப்பு காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் உள்ள நிலையில் அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கின் விளைவாக ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் குறித்து இந்தக்கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது. விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்வைத்த முறையீடுகளை கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம், அவற்றை நெறிப்படுத்தி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .