சிவராத்திரி நிகழ்வுகள்
24-02-2017 11:04 AM
Comments - 0       Views - 117

கொழும்பு, பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனத்தினால், கொழும்பு 07, பாண்ஸ் பிளேஸ், இல.22இல் அமைந்துள்ள 'சாயி மந்திர்' இலும், கொழும்பு 06, வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை இல. 23ல் அமைந்துள்ள சிவானந்தா நிலையத்திலும், இன்று (23) பிற்பகல் 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.30 மணி வரை, மகா சிவராத்திரி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

சிவனுக்குரிய நாம ஜெபம், பஜனைப் பாடல்களுடன் இரவு முழுவதும் நடைபெறுவதுடன், சிவானந்த நிலையத்தில் 04 சாமத்துக்கும் சிவலிங்க அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

லிங்கோற்பவ முகூர்த்தத்தில், பக்தர்கள் தங்கள் திருக் கரங்களினாலேயே வில்ல அர்ச்சனை செய்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக, சாயி சேவா நிலைய உபதலைவர். சகோ. த. யோகராஜா தெரிவித்தார்.

நிகழ்வுகள் நடைபெறும் இரு நிலையங்களிலும், சிவராத்திரியின் மகிமை பற்றி சின்மயா மிஷன் சுவாமிகள் தர்ஷன் சைத்தன்யவின் சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெறும்.

"சிவராத்திரி நிகழ்வுகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty