2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கொல்லும் சைட்டம் வேண்டாம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

மாலபேயில் உள்ள சைட்டம் கல்வி நிறுவனத்துக்கு (தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவனம்) எதிர்ப்பு தெரிவித்து, ஜே.வி.பியினால் கொழும்பில், நேற்று (23), மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.   

“இலவசக் கல்வியை ஒழிக்கும் சைட்டம்” எனும் தொனிப்பொருளில் இந்தப் பேரணி, மருதானை தொழில்நுடப கல்லூரிக்கு முன்பாக, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமானது.   

அப்பேரணி, கொழும்பு-கோட்டை ரயில் நிலையம் வரை சென்றதுடன் அங்கு எதிர்ப்பு கூட்டமும் நடத்தப்பட்டது.   

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தலைமையில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியிலும் கூட்டத்திலும், ​ஜே.வி.பியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.   

அதுமட்டுமன்றி, அகில இலங்கை வைத்திய பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறான அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டனர்.  

இதன்போது, பேரணியில் கலந்து கொண்டோர் “சைட்டம் வேண்டாம்”, “சைட்டம் வேண்டாம்”, “நோயாளியைக் கொள்ளும் சைட்டம் வேண்டாம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .