2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மறுத்தது சந்திரிகா அலுவலகம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் பிரதானியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஒரு சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி கருத்துகளை முன்வைக்கவில்​லை என்று சுட்டிக்காட்டிய அந்த அலுவலகம், இராணவத்தின் விளக்கத்தையும் மறுத்துள்ளது.   

“யுத்தம் முடிந்த நிலையில் இராணுவத்தினரால்” தமிழ்ப் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தெரிவிக்கப்பட்டதை, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் றொஷான் செனவிரத்ன மறுத்து, அறிக்கை விடுத்திருந்தார்.  இவ்வாறான பேச்சுக்கள் நல்லிணக்கத்துக்கு கேடானது எனவும் பிரிகேடியர் றொஷான் செனவிரத்ன கூறியிருந்தார்.  

பிரிகேடியர் றொஷான் செனவிரத்ன கூறுவது போல ஒரு கூற்றை அல்லது அறிக்கையை விடவில்லை என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் வலியுறுத்திக் கூறியது.  

எந்ததொரு கட்டத்திலும் ஒட்டு மொத்தமாக அவர் இராணுவத்தை குறிப்பிடவுமில்லை குற்றம் சாட்டவும் இல்லை எனவும் அவ்வலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .