‘கொக்கி’னால் நீர்வளம் பாதிக்கும்
24-02-2017 11:27 AM
Comments - 0       Views - 101

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“கொக்காகோலா நிறுவனத்தை இலங்கையில் அமைக்க அனுமதி கொடுத்தால், இலங்கையின் நீர்வளம் சுரண்டப்படும்” என, தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா எம்.பி, குறித்த நிறுவனத்துக்குத் தேவைப்படும் நீரைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் என்ன வழிமுறையைப் பயன்படுத்தும்? என்றும் வினவினார்.  

நிலையியற் கட்டளையின் பிரகாரம், ​நாடாளுமன்றத்தில் நேற்று (23) கேள்வியெழுப்பி கருத்து உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அவர் தொடர்ந்து கூறுகையில், “கொக்காகோலா நிறுவனத்தை இலங்கையின் அமைக்க அனுமதி, வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கொக்காகோலாவை இங்கு உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது.  

இந்த நிறுவனமானது, இந்திய அரசாங்கம் அனுமதித்த அளவை விட நீரை அதிகளவு பயன்படுத்திய குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன், எதிர்ப்புக் காரணமாக, அந்நாட்டில் அந்நிறுவனக் கிளைகள் மூடப்பட்டு வருகின்றன.  

அந்நிறுவனத்தை இங்கு அமைப்பதால், அந்நிய செலாவணி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் சாதகம் இருந்தாலும், இலங்கையின் நீர்வளம் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.  

இந்தியாவில் அந்நிறுவனத்துக்கு உள்ள தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் காரணமாக விவசாயிகள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  

இலங்கையில் அண்மைகாலத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறான ஒரு நிறுவனம், இங்கு அமைக்கப்படால் அதனால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே பல பிரதேசங்களில் வரட்சி காரணமாகக் கடல் நீர் உட்புகுந்து, உவர் நீராக மாறி வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.    

"‘கொக்கி’னால் நீர்வளம் பாதிக்கும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty