‘இராணுவப் புலனாய்வுத் துறையினர் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டனர்’
24-02-2017 11:31 AM
Comments - 0       Views - 153

-ஜே.ஏ.ஜோர்ஜ்

ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பில், இராணுவப் புலனாய்வுத் துறையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் வீமல் வீரவன்ச, நாடாளுமன்றத்தில் நேற்று (23) விசனம் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, விமல், மேற்கண்டவாறு விசனம் தெரிவித்தார்.  

முன்னதாக கேள்வியெழுப்பிய விமல்,  “ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

சம்பவ தினம் இந்த இராணுவ வீரர்கள், தெஹிவளைப் பகுதியில் நடமாடியமையே இவர்களைக் கைது செய்வதற்குக் காரணமாகவும் அமைந்துள்ளது.   

இந்த இராணுவ அதிகாரிகளின் புகைப்படங்கள் கீத் நொயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்குத் தம்மை அர்ப்பணித்த புலனாய்வுத் துறையினர் காட்டிக் கொடுக்கப்படுகின்றனர்” என்றார்.  

"‘இராணுவப் புலனாய்வுத் துறையினர் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டனர்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty