2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சந்திரிகாவின் தகுதியை உரசி பார்க்கவேண்டும்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு, பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அவருக்கு, தற்போதைய முப்படைகளின் தற்போதைய தளபதியான ஜனாதிபதியே பதிலளிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, “அவருடைய தகுதியை அரசாங்கமே உரசிப்பார்க்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.  

சந்திரிகா பண்டாரநாயக்க, சர்வதேசத்தின் முன்னிலையில் தங்களுடைய இராணுவத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார் என்ற தலைப்பிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“யுத்தத்தினால் விதவையானவர்களிடம், இலங்கை படையினர் பாலியல் சுரண்டல்களை மேற்கொண்டு வருவதாக சந்திரிகா குற்றஞ்சாட்டியுள்ளார்.  

யுத்த வலயத்தில் இருந்த பெண்களை எங்களுடைய இராணுவம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக, இரண்டு விசாரணைகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.  

2015 மார்ச் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட தருஸ்மான் அறிக்கையிலும், 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட நவனீதம்பிள்ளை மற்றும் அல்-ஹுசைன் அறிக்கையிலும், சாட்சிகள் ஏதுமின்றி ‘பெண்கள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டல்’ என்ற தலைப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.   

எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடர், ஆரம்பிக்கப்படவிருக்கின்ற நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதியும் முப்படைகளின் முன்னாள் தளபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் பிரதானியாக செயற்படும் சந்திரிக்கா, படையினருக்கு எதிராக இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைக்கும் போது, அதனை அரசாங்கத்தின் கூற்றாகவே ஏற்றுக்கொள்ளவேண்டிவரும். ஆகையால், அவற்றுக்கு நான் பதிலளிக்கவேண்டியதில்லை. தற்போதைய ஜனாதிபதியே பதிலளிக்கவேண்டும் என்றார்.  

இந்நிலையில், படையினருக்கு அவமரியாதையை ஏற்படுத்திய சந்திரிகா, அந்த அலுவலகத்தின் பிரதானியாக இருக்கமுடியுமா? என்பது தொடர்பிலான தகுதியை, அரசாங்கமே உரசிபார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X