கணினிகள் பகர்ந்தளிப்பு
24-02-2017 11:51 AM
Comments - 0       Views - 18

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கல்வி வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு, கணினிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (23) மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மற்றும் கஷ்ட பாடசாலைகள் குறிப்பாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகம் சித்தியடைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு,   கணினிகள்  வழங்கி வைக்கப்பட்டன.

வடமேல் மாகாண கல்வியமைச்சர் சந்தியா எஸ்.ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.பீ.எஸ்.கே.விஜேசிங்க, தமிழ் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் இசெட். ஏ.சன்ஹீர் உள்ளிட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

"கணினிகள் பகர்ந்தளிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty