இலசவ வைத்திய சிகிச்சை மற்றும் இரத்ததான நிகழ்வு
25-02-2017 02:40 PM
Comments - 0       Views - 13

எம்.யூ.எம். சனூன்

இலவச வைத்திய சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரைக்கும், புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் இயங்கும் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் அமைப்பின் வேண்டுகோளின் பேரில், கொழும்பு சட்டக்கல்லூரி மற்றும் றொட்றெக்ட் கழகம் என்பன இணைந்து இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்துள்ளன.

இரத்த அழுத்தம், நீரிழிவு, பார்வை குறைபாடு, பற்சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டு இலவசமாக மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளதோடு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

"இலசவ வைத்திய சிகிச்சை மற்றும் இரத்ததான நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty