பேச்சை அளந்து பேசுதல் நல்லது
27-02-2017 10:29 AM
Comments - 0       Views - 41

“உனக்கு மட்டும் இந்த இரகசியத்தைச் சொல்கின்றேன். தப்பித்தவறி வேறு ஒருவரிடமும் இந்த இரகசியத்தைச் சொல்ல வேண்டாம்” எனச் சொல்லுவார்கள். ஏற்கெனவே, இந்தச் சமாசாரத்தைப் பலபேரிடமும் சொல்லியிருப்பார்கள். இந்த இரகசியம் இப்படியே பலபேரூடாகப் பரவி, வேற்று உருவுடன் பரபரப்பாய்ப் போய்ச் சேருவதை, முதலில் சொன்னவர் கேட்டாலே ஆச்சரியப்பட்டுப் போய்விடுவார். 

ஒருவரது இரகசியத்தை அல்லது பல நபர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரகசியமாக்குவது சிலருக்கு இஷ்டமான பொழுதுபோக்கு.

ஆனால், தங்கள் வீட்டு விடயங்களை, மூடிமறைத்துவிட்டு, மற்றவர் விடயங்களில் கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது வேடிக்கையானது; ஆனால் விஷமத்தனமானது.

சில அப்பாவிகளிடம் கண்ட விடயங்களையும் பரிமாறினால் அவர்களும் சொல்லக் கூடாத விடயங்களை உடன் மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்டு விடுவர். 

நாங்கள் பேசுபவர்களின் நடத்தையறிந்து, பேச்சை அளந்து பேசுதல் நல்லது. 

 

வாழ்வியல் தரிசனம் 27/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"பேச்சை அளந்து பேசுதல் நல்லது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty