பிரயோசனமற்ற விடயத்தில் கரிசனை எதற்கு?
28-02-2017 09:38 AM
Comments - 0       Views - 33

நெஞ்சில் உறுதியான எண்ணங்களைக் கொண்டவர்கள் இரகசியங்களைக் கசியவிடமாட்டார்கள். வலிந்து மற்றையவர்களின் அந்தரங்கங்களை அறிய முற்படுவதும் அதனைச் சொல்வதும் ஏற்புடையதல்ல. பிரயோசனமற்ற விடயத்தில் கரிசனை எதற்கு?

இன்று சமூகத்தில் பல புல்லுருவிகள் நல்லவர்கள்போல் நடித்துவந்தால் அவர்களின் மறுபக்க இரகசியங்களை உலகுக்கு அம்பலப்படுத்தியேயாக வேண்டும்.

இதனால் மக்கள் எச்சரிக்கப்படுவதுடன் தப்புச் செய்பவர்களும் தங்களது செயல்களை மாற்றி, நல்வழியில் செல்லவும் ஏதுவாக இருக்கும்.

பழைமை மிக்க எமது வைத்திய முறைகள் இரகசியமாகவே பேணப்பட்டு, அவை இன்று எமக்குக் கிடைக்காமலே போய்விட்டன.

அறியாமையின் விளைவுகளைப் புரிந்துகொண்ட சமூகம், இனியாவது மக்களுக்குச் சேர வேண்டியதை மறைக்காமல் சேரச் செய்திடல் வேண்டும். 

விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மறைத்தால் இந்த உலகத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

சொல்லக்கூடாதவற்றைச் சொல்லும் நபர்கள், சொல்லக்கூடிய நல்ல விடயங்களை நாடவேண்டும். 

 

வாழ்வியல் தரிசனம் 28/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

"பிரயோசனமற்ற விடயத்தில் கரிசனை எதற்கு?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty