கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் கொடியேற்றம்
28-02-2017 05:22 PM
Comments - 0       Views - 234

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் வருடாந்த கொடியேற்ற விழா நேற்று மாலை நடைபெற்றது.

கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றது.

வருடம் தோறும் ஜமாதுல் ஆகிர் பிறை ஒன்று முதல் பிறை பனிரெண்டு  வரை இக் கொடியேற்ற விழா நடைபெறும்

12 நாட்கள் இடம்பெறும் இவ் விழாவில் பக்கீர் ஜமாத்தினரின் ராத்திபுக்கள்,உலமாக்கள் மார்க்க அறிஞ்சர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளன.

கொடி இறக்கும் தினமாகிய  எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை லுஹர் தொழுகையை தொடர்ந்து மாபெரும் கந்தூரி வழங்கப்பட்டு நிறைவடைய உள்ளது.

" கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் கொடியேற்றம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty