'டோரா' திரையிடல் திகதி அறிவிப்பு
02-03-2017 12:08 PM
Comments - 0       Views - 207

நடிகை நயன்தாரா நடிப்பில் ஹொரார் திரைப்படமான 'மாயா' கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானதுடன் அவரது திரையுலக பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுச் சென்றது.

இந்நிலையில், அவர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் 'டோரா' என்றத் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஹொரர் திரைப்படமான இதில், தம்பி ராமைய்யா, ஹரிஸ' உத்தமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை இம்மாதம் 31ஆம் திகதி திரையிடுவதற்கு படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

நயன்தாரா தற்போது, வேலைகாரன், இமைக்கா நொடிகள், அறம் மற்றும் கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

"'டோரா' திரையிடல் திகதி அறிவிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty