‘நினைவுப் பேருரையும் விருது வழங்கலும்’
03-03-2017 01:42 PM
Comments - 0       Views - 24

துரைவி 86ஆவது பிறந்த தினத்தையொட்டி, நினைவுப் பேருரையும் விருது வழங்கல் விழாவும், நாளை சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை மேமன்கவி வழங்கவுள்ளார்.

“சமகால அரசியல் குரலாக மலையக இலக்கியம்” என்ற தொனிப்பொருளில், நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர், உயைாற்றவுள்ளார். நன்றியுரையை ராஜ் பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்கவுள்ளார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பண்ணாமத்துக்கவிராயர்
எஸ்.எம்.பாரூக் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ‘காரவான் கீதங்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் பாஸ்கரன் சுமன் எழுதிய, ‘திரிதலிருந்து தெரிதல் - பண்பாட்டு உரையாடல்’ எனும் கட்டுரைத் தொகுப்பும், இவ்வாண்டுக்கான துரைவி விருதைப் பெறவுள்ளன.

"‘நினைவுப் பேருரையும் விருது வழங்கலும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty