நடமாடும் சேவை
05-03-2017 12:34 PM
Comments - 0       Views - 14

ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புழுதிவயல் மற்றும் விருதோடை கிராமங்களை உள்ளடக்கிய வகையில் தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை, புழுதியவயல் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நாளை (6) காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

15 வயதைப் பூர்த்தி செய்த தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், தே.அ.அ தெளிவின்மை மற்றும் தே.அ.அ தொலைந்தவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரும்புவோர், பிறப்புச்சான்றிதழின் பிரதி, அடையாள அட்டைக்கான  6 வர்ணப் புகைப்படங்கள், 15 மற்றும் 35 ரூபாய் பெறுமதியான முத்திரை, நீளமான கடித உறை என்பனவற்றுடன் சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"நடமாடும் சேவை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty