பஞ்சாயத்து பண்ணும் விஜய்
05-03-2017 03:42 PM
Comments - 0       Views - 496

இளையதளபதி விஜய் நடித்து வரும் “விஜய் 61” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பதிரைப்படத்தின் கதையின் ஒருபகுதி, கடந்த 80களில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே, செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

80கள் காலத்தில் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் என்பவர் மிகவும் முக்கியமானவர். அவருடைய சொல்லுக்கு ஊரே கட்டுப்படும்.

அவர் கொடுக்கும் தீர்ப்பை கிராம மக்கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு இணையாக மதிப்பு கொடுப்பார்கள். அப்படிப்பட்ட பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில்தான் விஜய் நடித்து வருகிறாராம். பஞ்சாயத்து தலைவரின் மனைவியாக நித்மேனன் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மூன்றுவிதமான கேரக்டரில் விஜய் நடித்து வருவதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் நடித்து வருகின்றனர். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் வளர்ந்து வருகிறது.

விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.

 

"பஞ்சாயத்து பண்ணும் விஜய்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty