கட்டுப்பாடான செயல்கள் கட்டாயம்
06-03-2017 09:51 AM
Comments - 0       Views - 39

விடியவிடிய பேஸ்புக்குடன் சங்கமிப்பதும் கணினியிலும் கைபேசியிலும் எந்நேரமும் விளையாட்டில் ஈடுபடுவதுகூட ஒருமன மயக்கம்தான். எல்லாவற்றுக்கும் ஒரு நேரகாலம் வேண்டும்.

இந்நிலையில் இப்படி இயங்குவதை இறுமாப்பாக, அதை ஒரு சாதனை போல் பேசுகின்றனர்.

நேர விரயம் ஒருவரின் கல்வியை, உடல்நிலையை, முன்னேற்றத்தைப் பின்னோக்கிச் செல்லவைக்கும்.

படிக்கும் வயதில், விழிபிதுங்க, ஒரே திசையில், ஒளியூட்டும் வண்ணத்திரையை வைத்த கண் மூடாமல், புலன்களைப் பேதலிக் வைப்பது நல்லதேயல்ல.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த எத்தனையோ வழிகள் உண்டு. கண்டபடி மூளைக்கு ஒவ்வாத வழிகளில் பயணிப்பது வாழ்வில் தவறுகளை வலிந்து திணிப்பதேயாகும். திட்டமிட்ட கட்டுப்பாடான செயல்கள் கட்டாயம் வெற்றிகளைப்  பெற்றுத்தரும்.

 

வாழ்வியல் தரிசனம் 06/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"கட்டுப்பாடான செயல்கள் கட்டாயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty