ஜனாதிபதித் தேர்தல்: நெருக்கடியில் பொஸ்வா பியோன்
06-03-2017 01:16 AM
Comments - 0       Views - 22

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் தொடருவதற்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான பொஸ்வா பியோன்,  பலத்த நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.  

தனது குடும்பத்துக்கு, நாடாளுமன்றத்தில் போலியான வேலைகளை வழங்கியமை தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொள்ளப்போவதாக கடந்த வாரம் வெளிப்படுத்தியிருந்த பியோன், அதற்குப் பின்னர் தனது ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் கடும் கடினத்தை எதிர்கொள்கிறார்.  

கடந்த ஜனவரி மாத நடுப்பகுதி வரை, ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் முன்னிலையில் இருந்த பியோன், தனது மனைவிக்கும் தனது பிள்ளைகளில் இரண்டு பேருக்கும், நாடாளுமன்ற உதவியாளர்கள் அல்லது ஆலோசனையாளர்களாக 900,000 யூரோக்களை வழங்கினார் என்று பத்திரிகையொன்று வெளிப்படுத்தியிருந்தமையைத் தொடர்ந்தே பின்னடைவைச் சந்தித்திருந்தார்.  

பிரான்ஸில், குடும்ப உறுப்பினர்களை பணிக்கமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகின்றபோதும், முன்னாள் பிரதமரான பியோனின் மனைவியான பெனிலோப், எவ்வகையான பணியை ஆற்றினார் என்பதற்கான ஆதாரங்களையே விசாரணையாளர்கள் தேடுகின்றனர்.  

இந்நிலையில், மேற்படி பிரச்சினைகள் தோன்றியதன் பின்னர், முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்த பெனிலோப், வெவ்வேறான பணிகளை ஆற்ற பியோனுக்கு சிலர் தேவைப்பட்டதாகவும், தானில்லாவிட்டால், அந்த பணியை ஆற்ற வேறு யாருக்கும் அவர் பணம் செலுத்தியிருப்பார் என்றும், ஆகவே தான் பணியாற்றுவதாக தாங்கள் முடிவு செய்ததாகக் கூறியுள்ளார்.  

நிலைமைகள் இவ்வாறாகவிருக்க, பியோனின் குடியரசுக் கட்சியின் அரசியல் தீர்மானங்களையெடுக்கும் செயற்குழு, நிலைமையை ஆராய்வதற்காக, இன்று (06), மாலையில் கூடவுள்ளது.     

"ஜனாதிபதித் தேர்தல்: நெருக்கடியில் பொஸ்வா பியோன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty