வரலாற்றில் இன்று: மார்ச் 10
10-03-2017 12:00 AM
Comments - 0       Views - 46

1629: இங்கிலாந்து மன்னன் 2 ஆம் சார்ள்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஆட்சியை தனது சுய கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரம்பித்தான். இந்நிலை 11 வருடகாலம் நீடித்தது.

1876: அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் முதலாவது வெற்றிகரமான தொலை அழைப்பை மேற்கொண்டார்.

1906: பிரான்ஸில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 1099 பேர் பலியாகினர்.

1911: இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், மொத்தத் தொகையான 4,092,973இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.

1922: பிரித்தானிய ஆட்சியாளர்களால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 2 வருங்களின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.

1933: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 115 பேர் பலி.

1945: 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

1959: திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.

1969: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1970: வியட்நாம் போர் - அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.

1977: யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982: கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1990: ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2003: விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல், இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் பலி.

"வரலாற்றில் இன்று: மார்ச் 10" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty